undefined

இன்று 'வந்தே மாதரம்' பாடல் விவாதத்தை மக்களவையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

 

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு, நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் இன்று டிசம்பர் 9ம் தேதி மக்களவையில் விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

இன்று "தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழா குறித்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். அடுத்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உரையாற்றுகிறார். பிரதமர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சரைத் தொடர்ந்து மற்றக் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். மக்களவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கவுரவ் கோகாய் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வங்காளத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரம் பாடல், 1870களில் நாட்டு மக்களிடையே தேசப்பற்றைத் தூண்டும் விதமாக இயற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து குடியரசு நாடாக ஆவதற்கு 2 நாட்களுக்கு முன்பு, அதாவது 1950ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி இந்த பாடல் தேசியப் பாடலாக அங்கீகரிக்கப்பட்டது.

இந்த விவாதத்திற்கு முன்னதாக, கடந்த மாதம் 7ம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி வந்தே மாதரம் பற்றிய சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டுப் பேசியதுடன், காங்கிரஸ் மீது விமர்சனத்தையும் முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!