undefined

பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் ரத்து!

 
1940 - 45 களில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனிடம் ஜெர்மன் படைகள் சரணடைந்தன. இதனை கொண்டாடும் வகையில் ரஷியாவில் ஒவ்வொரு ஆண்டும்  வெற்றி நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நடப்பாண்டில் ரஷியாவில்  மே 9 ம் தேதி 80 ம் ஆண்டு வெற்றி விழா நடைபெற இருப்பதாகவும்   இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தியா உட்பட நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷியா அழைப்பு விடுத்திருந்தது. இந்த வெற்றி விழாவில் பிரதமர்   மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உட்பட பலர்  கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ரஷிய வெற்றி நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை என ரஷியாவின் அதிபர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடி சார்பாக மத்திய அமைச்சர் ஒருவர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக, செளதி அரேபியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாதியில் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியிருந்தார்.

தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில் ரஷியப் பயணத்தை மோடி தவிர்த்திருக்கலாம் எனத் தெரிவிக்கின்றது.முன்னதாக ரஷியா - உக்ரைன் போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரஷியாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார். அந்த பயணத்தின்போது, இந்தியாவுக்கு வரும்படி  ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அவரும் அழைப்பை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?