போக்சோ சட்டத்தில் திருத்தம்? சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு பரிந்துரை!
உத்தரபிரதேசத்தில் போக்சோ வழக்கில் சிக்கிய நபருக்கு அலகாபாத் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. மேலும் பாதிக்கப்பட்டவருக்கு வயது நிர்ணய சோதனை நடத்தவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கரோல், கோடீஸ்வர் சிங் அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், இளம் வயது காதல் உறவுகள் தேவையற்ற வகையில் குற்றமாக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று கூறினர். அதற்காக போக்சோ சட்டத்தில் ரோமியோ–ஜூலியட் பிரிவை அறிமுகப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர். மேலும் இந்தச் சட்டத்தை பயன்படுத்தி தனிப்பட்ட பகைமைகளை தீர்க்க முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழிமுறைகள் உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!