undefined

விஷவாயு தாக்கி பணியாளர் பலி…  பாதாள சாக்கடை சுத்தம் செய்த போது சோகம்  !

 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதிபராசக்தி நகர் பகுதியில் பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கிய தூய்மை பணியாளர் ராஜா விஷவாயு தாக்கி உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் பருத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த அவர், மோட்டார் பம்பை புகைப்படம் எடுக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டது. மாநகராட்சி ஒப்பந்த அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி பணியாளர்கள் கீழிறங்கியதாக கூறப்படுகிறது.

முதலில் சங்கர் என்பவர் முககவசம் அணிந்து கீழே இறங்கி மோட்டாரை படம் எடுத்தார். பின்னர் செல்போனை ராஜாவிடம் கொடுக்க முயன்றபோது, விஷவாயு நேரடியாக தாக்கி ராஜா மயங்கி சாக்கடைக்குள் சரிந்தார். அவரை காப்பாற்ற முயன்ற சங்கருக்கும் மயக்கம் ஏற்பட்டதால், மேலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி ராஜாவின் உடலை மீட்டனர். விஷவாயு தாக்கி சாக்கடை நீரில் விழுந்ததால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!