13 வயது சிறுவன் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!
உத்தரப்பிரதேசம் பர்கர் பகுதியில் 13 வயது ஆயுஷ் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி ஒருவர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். தொழிலதிபர் அசோக் கேசர்வானியின் மகனான சிறுவன், வீட்டின் அருகே விளையாடிக்கொண்ட போது கடத்தப்பட்டார். கடத்தல்காரர்கள் வாட்ஸ்அப் மூலம் பணம் கேட்டு மிரட்டிய நிலையில், சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.
குற்றவாளர்கள் போலீசாரிடம் சிக்கிவிடுவோம் என அச்சமடைந்து, சிறுவனை கொடூரமாக கொலை செய்து, உடலை பெட்டியில் அடைத்து சாலையோரம் வீசிச் சென்றனர். போலீசார் தொழில்நுட்ப கண்காணிப்பின் மூலம் குற்றவாளிகளை தேடி வந்து, பர்கர் பகுதியில் அவர்களை சுற்றி வளைத்தபோது துப்பாக்கியால் எதிர்ப்பு அளித்த போது, 70 வயதான சாவே இமான் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மற்றொரு குற்றவாளி இர்பான் அன்சாரி காலில் குண்டடிபட்டு கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையில், கைதான நபர்கள் சிறுவனின் குடும்பத்திற்குத் தெரிந்தவர்கள் அல்லது வீட்டிற்கு வாடகைக்கு வந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!