நடைபயிற்சி சென்ற போது டெம்போ மோதி காவலர் பரிதாப மரணம்!
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் யூஜின் கிராஸ் (49). இவர் குமரி மாவட்ட மத்திய குற்றப்பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். கடந்த 4-ம் தேதி காலை 6.15 மணியளவில் வேப்பமூடு – கோர்ட் ரோட்டில் வழக்கம்போல் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த டெம்போ வாகனம் யூஜின் கிராஸ்மீது மோதியது. தொடர்ந்து அவரை இழுத்துச் சென்றதால் கால் சிதைந்து கடுமையாக காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்கவில்லை. நேற்று அதிகாலை யூஜின் கிராஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் காவல்துறையினர் மற்றும் உறவினர்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!