காவல் நிலையத்தில் திடீர் தீ… பறிமுதல் வாகனங்கள் கருகி நாசம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலையம் கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் சாலை விபத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவை விசாரணை முடியும் வரை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், அந்த பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட லாரி உள்ளிட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்த சூளகிரி தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீ மேலும் பரவாமல் விரைந்து கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!