அரசியல் அழுத்தம் vs நீதித்துறை சுதந்திரம்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிரான பதவிநீக்க நோட்டீஸ்... 56 முன்னாள் நீதிபதிகள் கடும் கண்டனம்!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் அளித்துள்ள நோட்டீஸுக்கு எதிராக, 56 முன்னாள் நீதிபதிகள் கூட்டாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது, 'நீதிபதிகளை அச்சுறுத்தும் வெட்கக்கேடான முயற்சி' என்று அவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.
விவகாரத்தின் பின்னணி என்ன?
'திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு அருகே அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்' என்று கோயில் அதிகாரிகளுக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் பின்னணியில், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து, அவரைப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி டிசம்பர் 9-ஆம் தேதி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் வழங்கினர்.
முன்னாள் நீதிபதிகளின் கண்டனம்:
இந்த அரசியல் முயற்சிக்கு எதிராக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், ஹேமந்த் குப்தா மற்றும் சென்னை உட்பட பல்வேறு உயர் நீதிமன்றங்களின் 5 தலைமை நீதிபதிகள் உட்பட 56 முன்னாள் நீதிபதிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் அவர்கள், "சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவின் அரசியல் எதிர்பார்ப்புகளுடன் இணங்காத நீதிபதிகளை அச்சுறுத்தும் வெட்கக்கேடான முயற்சியே இது. இது தொடர அனுமதித்தால், நமது நீதித்துறை சுதந்திரத்தின் ஆழமான வேர்களைத் துண்டித்து விடும். பதவிநீக்கம் ஒரு ஆயுதமாக: பதவிநீக்கம் என்பது மிக அரிய, விதிவிலக்கான நடவடிக்கை ஆகும். ஆனால், இந்தத் தற்போதைய முயற்சி, நீதித்துறை சுதந்திரத்தின் இதயத்தைத் தாக்குவதற்கும், பழிவாங்கும் கருவியாகப் பயன்படுத்துவதற்கும் செய்யப்படும் ஒரு முயற்சியாகும்.
அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு: அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பச் செயல்பட நீதிபதிகளைக் கட்டாயப்படுத்தும் விதமாகப் பதவிநீக்க நடைமுறையைப் பயன்படுத்துவது, அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பையே அச்சுறுத்தும் கருவியாக மாற்றி விடும்.
நீதிபதி யாருக்குப் பொறுப்பு?: "நீதிபதிகள் தாங்கள் எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணத்துக்கும், அரசமைப்புச் சட்டத்துக்குமே பதிலளிக்கப் பொறுப்பானவர்கள். மாறாக அரசியல் அழுத்தங்களுக்கோ, சித்தாந்த மிரட்டல்களுக்கோ அல்ல." மேலும், சட்டத்தின் ஆட்சிக்கு எதிராக உள்ள இந்த ஜனநாயக விரோத முயற்சியை அனைத்துத் தரப்பினரும் கண்டிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!