அரசியலில் திருப்பம்: திமுக கூட்டணியை நோக்கி நகர்கிறாரா ராமதாஸ்? - "ஸ்டாலின் ஆட்சி சிறப்பு" எனப் பாராட்டு!
அதிமுக - பாஜக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் இணைந்ததை "சட்டவிரோதம்" என்று சாடியிருந்த ராமதாஸ், இன்று முதல்வரின் செயல்பாடுகளைப் புகழ்ந்து பேசியுள்ளது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
"தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாகச் செயல்படுகிறார்" என்று ராமதாஸ் வெளிப்படையாகப் பாராட்டியுள்ளார். இது அவர் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதைக் காட்டுகிறது. திருமாவளவன் (விசிக) இருக்கும் கூட்டணியில் இடம் பெறுவீங்களா?" என்ற கேள்விக்கு, "அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்" எனப் பதிலளித்துள்ளார். தத்துவார்த்த ரீதியாக முரண்படும் விசிக மற்றும் பாமக ஒரே கூட்டணியில் இணைவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் மறுக்கவில்லை.
"கூட்டணியில் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா?" என்ற கேள்விக்கு, "இந்தியாவில் இதுவரை யாரும் எங்களுக்குப் பங்கு தரவில்லை. நான் கலைஞரின் ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தவன்" எனக் குறிப்பிட்டு, திமுக-வுடனான தனது பழைய உறவை நினைவுபடுத்தினார்.
விருப்ப மனு விநியோகம் - முழு விவரம்:
இன்று காலை 10 மணி முதல் தைலாபுரம் தோட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. பொதுத் தொகுதி - ₹1000 | தனித் தொகுதி மற்றும் பெண்கள் - ₹500. இன்று தொடங்கி வரும் ஜனவரி 12-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். ராமதாஸின் மகள் காந்திமதி மற்றும் மூத்த தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவார்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!