undefined

பொங்கல் போனஸ் யாருக்கு ₹3,000? யாருக்கு ₹1,000? - அரசாணை வெளியீடு, முழு விவரம்!

 

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் போனஸ் மற்றும் சிறப்புப் பரிசுத் தொகை குறித்த விரிவான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உதயச்சந்திரன் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழக அரசு போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, அரசுக்கு சுமார் 160 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

1. ₹3,000 போனஸ் பெறுபவர்கள் ('சி' மற்றும் 'டி' பிரிவு):

தமிழக அரசின் 'சி' (Group C) மற்றும் 'டி' (Group D) பிரிவின்கீழ் வரும் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ₹3,000 வரை போனஸ் (Adhoc Bonus) வழங்கப்படுகிறது. முழு நேரப் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இதில் அடங்குவர்.

2. ₹1,000 பொங்கல் பரிசுத் தொகை பெறுபவர்கள் (ஓய்வூதியதாரர்கள்):

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக ₹1,000 வழங்கப்படும். இதில் கீழ்க்கண்டவர்கள் அடங்குவர்: சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள்: சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்கள்/உதவியாளர்கள்.

ஊராட்சி செயலாளர்கள், கிராம நூலகர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பெருக்குபவர்கள், தோட்டக் காவலர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள். பணியாளர் எந்தப் பிரிவில் (A, B, C, or D) ஓய்வு பெற்றிருந்தாலும் அல்லது பணியிடையே மரணம் அடைந்திருந்தாலும், அவர்களின் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ₹1,000 வழங்கப்படும். தற்காலிக ஓய்வூதியதாரர்கள்: 'சி' மற்றும் 'டி' பிரிவில் தற்காலிக ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இது பொருந்தும்.

3. போனஸ் யாருக்குக் கிடைக்காது?

உயர் அதிகாரிகள்: 'ஏ' (Group A) மற்றும் 'பி' (Group B) பிரிவு பதவிகளிலிருந்து ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்திந்தியப் பணி அலுவலர்களுக்கு (IAS, IPS etc.) இந்தப் பரிசுத் தொகை வழங்கப்படாது. UGC, AICTE, ICAR ஊதிய விகிதங்களின் கீழ் வரும் அலுவலர்களுக்கு இது பொருந்தாது. சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான உதவித்தொகை, உலாமா உதவித்தொகை மற்றும் புகழ்பெற்ற அறிஞர்களுக்கான சமூக உதவித்தொகை பெறுபவர்களுக்கு இது வழங்கப்படாது.

கடந்த ஜனவரி 1, 2026 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பணியிலிருந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு இந்தப் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட மாட்டாது என அரசாணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பொங்கல் போனஸ் தொகையானது நேரடியாகப் பணியாளர்களின் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வங்கிச் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!