undefined

களைக்கட்டும் பொங்கல் கொண்டாட்டங்கள்... இளவட்டக்கல்லைத் தூக்கி அசத்திய பெண்கள்! 

 

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள வடலிவிளை கிராமத்தில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டுப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று நடைபெற்ற வீர விளையாட்டுகளில், இளவட்டக்கல் தூக்கும் போட்டி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் போட்டியில் 45 கிலோ முதல் அதிகபட்சமாக 129 கிலோ வரையிலான பல்வேறு எடையுள்ள இளவட்டக் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆண்களுக்கு மட்டுமே உரித்தான விளையாட்டு என்று கருதப்படும் இளவட்டக்கல் போட்டியில், இந்தப் பகுதி பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். குறிப்பாக 45 கிலோ மற்றும் 60 கிலோ எடையுள்ள கற்களைப் பெண்கள் மிக லாவகமாகத் தூக்கிச் சுழற்றினர்.

பெண்கள் பிரிவில் 60 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்லைத் தூக்கி, தனது தலையைச் சுற்றி 26 முறை கொண்டு வந்த ராஜகுமாரி முதலிடம் பிடித்தார். லெஜின் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

ஆண்கள் பிரிவில் கடினமான 129 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்லைத் தூக்கி ஜெப ஜென்சன் முதற்பரிசைத் தட்டிச் சென்றார். புவின் மற்றும் மகேந்திரன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர். இளவட்டக்கல் மட்டுமின்றி, கனமான உரலை ஒற்றைக்கையால் தலைக்கு மேல் தூக்கி நிறுத்தும் போட்டியும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!