undefined

தமிழகம் முழுவதும் எதிரொலித்த "பொங்கலோ பொங்கல்"... கதிரவனுக்கு நன்றி செலுத்தி மக்கள் வழிபாடு!

 

உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் நுழையும் இந்தத் தை மாதப் பிறப்பை, மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்று வருகின்றனர். பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து, வீட்டு வாசல்களில் மாவிலை தோரணங்கள் கட்டி, வண்ணமயமான கோலமிட்டு வீடுகளை அலங்கரித்தனர்.

திறந்த வெளியில் புதுப்பானையில் இஞ்சி, மஞ்சள் குலை கட்டி, புது அரிசியிட்டுப் பால் பொங்கி வரும்போது, குடும்பத்தினர் அனைவரும் "பொங்கலோ பொங்கல்" என உற்சாகமாக முழக்கமிட்டு சூரிய பகவானை வழிபட்டனர். சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் மற்றும் மொச்சை, அவரை உள்ளிட்ட காய்கறிகளுடன் கரும்பு, வாழைப்பழம் போன்றவற்றைத் தாம்பூலத்தில் வைத்து இயற்கைக்கு நன்றி செலுத்தினர்.

நகரங்களை விடக் கிராமப்புறங்களில் இந்தப் பொங்கல் கொண்டாட்டம் இன்னும் கூடுதலாகக் களைகட்டியுள்ளது. இளவட்டக் கல் தூக்குதல், வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் புத்தாடை அணிந்து, ஊர் பொது இடங்களில் கூடி பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!