பொங்கல் பரிசுத்தொகுப்பு: ஜனவரி 2க்குள் வீடு தேடி வரும் டோக்கன் - கூட்டுறவுத் துறை அதிரடி சுற்றறிக்கை!
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை எவ்விதக் குழப்பமுமின்றிச் சீராக நடத்துவதற்காக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
ரேஷன் கடை விற்பனையாளர்கள், அந்தந்தப் பகுதி ரேஷன் அட்டைதாரர்களின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன்களை வழங்க வேண்டும். அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஜனவரி 2-ம் தேதிக்குள் டோக்கன்களை அச்சிட்டு, விநியோகம் செய்யத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
டோக்கன்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நாள் மற்றும் நேரம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். கூட்ட நெரிசலைத் தவிர்க்க, ஒரு நாளில் முற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும், பிற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும் மட்டுமே பரிசுத் தொகுப்பு வழங்கப்பட வேண்டும்.
அதிகக் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ள கடைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய உணர்திறன் மிக்க கடைகளின் பட்டியலை முன்கூட்டியே தயார் செய்ய வேண்டும். இந்தப் பட்டியலை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது ஆணையாளரிடம் வழங்கி, போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும், பண்டிகை காலத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அனைவரும் எளிதாகப் பரிசுத் தொகுப்பைப் பெறுவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!