undefined

ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு... இதுவரை வாங்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!?

 

இதுவரை ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்காதவர்களுக்கு, சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பியதும் வாங்குவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது. 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், இந்த திட்டத்தை ஜனவரி 8-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் தினமும் டோக்கன் வழங்கி பரிசு வழங்கப்பட்டது. போகிப் பண்டிகையான 14-ந் தேதியும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இருப்பினும் பலர் சொந்த ஊர் சென்றதால் அனைவருக்கும் பரிசு வழங்க முடியவில்லை.

90 சதவீதத்திற்கு மேற்பட்டோர் பரிசு பெற்றுள்ளனர். இன்னும் சிலர் வாங்காமல் உள்ளனர். அவர்கள் ஊர் திரும்பியதும் பொங்கல் பரிசு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும். இம்மாதம் இறுதி வரை ரூ.3,000 ரொக்கத்துடன் பரிசு வழங்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!