விடுபட்டவர்களுக்குக் ஜன.20 முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்த ஆண்டு வழக்கத்தை விடக் கூடுதலாக ₹3,000 ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுப் பொருட்கள் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகைக்காகச் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் மற்றும் டோக்கன் பெற்றும் வாங்க முடியாதவர்களுக்குத் தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பரிசுத் தொகுப்பில் ரொக்கப்பணம் ₹3,000 , 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழு நீளக் கரும்பு, ஒரு வேஷ்டி மற்றும் ஒரு சேலை ஆகியவை வழங்கப்படுகிறது. இதுவரை பொங்கல் தொகுப்பு வாங்காத 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்கள்.
வரும் ஜனவரி 20-ம் தேதி முதல் அந்தந்த நியாய விலைக் கடைகளில் (ரேஷன் கடைகள்) பெற்றுக் கொள்ளலாம். சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஏற்கனவே பொங்கல் தொகுப்பைப் பெற்றுவிட்ட நிலையில், சொந்த ஊர் பயணம் மற்றும் இதர காரணங்களால் விடுபட்ட சுமார் 10 சதவீத மக்களுக்காக இந்த விநியோகம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!