தமிழகம் முழுவதும் 2.22 கோடி குடும்பங்களுக்கு மெகா பொங்கல் பரிசு!
தமிழர்களின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கலைச் சிறப்பிக்க 2026-ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க தமிழக அரசு தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இந்த ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் சுமார் 2.22 கோடி குடும்பங்கள் பயனடைய உள்ளன. வழக்கம்போல் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட அரசு முனைந்துள்ளது.
கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ஏழை மக்களுக்கு புத்தாடை வழங்கவும் இலவச வேட்டி, சேலை திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 2026 பொங்கலுக்காக 1.77 கோடி வேட்டிகள் மற்றும் 1.77 கோடி சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கான உற்பத்தி மற்றும் விநியோக பணிகள் 85 சதவீதத்துக்கும் மேல் நிறைவடைந்து, மாவட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அரிசி வாங்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்போர் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் தற்போது ரொக்கப்பணம் மற்றும் குறிப்பிட்ட பொருட்கள் வழங்கப்படும். இதனால் 2026 பொங்கல், கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு இனிப்பான திருவிழாவாக அமையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!