பொங்கல் சிறப்புப் பேருந்தில் 3.58 லட்சம் பேர் பயணம்!
பொங்கல் திருநாளை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 3.58 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. ஜனவரி 9 முதல் சிறப்புப் மற்றும் வழக்கமான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
ஜனவரி 11-ஆம் தேதி நள்ளிரவு நிலவரப்படி, வழக்கமாக இயங்கும் 2,092 பேருந்துகள் மற்றும் கூடுதலாக 668 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் மொத்தம் 2,760 பேருந்துகள் செயல்பட்டு, 1,11,316 பயணிகள் பயணம் செய்தனர்.
ஜனவரி 9 முதல் 11-ஆம் தேதி மொத்தம் 8,270 பேருந்துகள் இயக்கப்பட்டு, 3,58,496 பயணிகள் பயணித்துள்ளனர். இதுவரை 2,38,535 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். பொதுமக்கள் கடைசி நேர கூட்டநெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்து பயணிக்குமாறு போக்குவரத்துக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!