பொங்கல் தொடர் விடுமுறை முடிவு... சென்னை சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து மக்கள் சென்னை திரும்பியதால் புறநகர் பகுதிகளில் முக்கிய சாலைகள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சொந்த ஊர்களுக்கு சென்ற லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் நகரம் திரும்பியதால் சாலைகள் நிரம்பின.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதலே சென்னை நோக்கி கார்கள், வேன்கள், பேருந்துகள் வரத் தொடங்கின. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. நெரிசலை குறைக்க கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு போக்குவரத்து போலீஸார் வாகனங்களை சீரமைத்தனர்.
ஜிஎஸ்டி சாலையில் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பல கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதே நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் 25 முதல் 300 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!