ரூ.10க்கு சிகிச்சை அளித்த ‘அன்பு டாக்டர்’ பொன்னையா காலமானார்... கண்ணீர் அஞ்சலி!
திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் 45 ஆண்டுகளாக குறைந்த செலவில் மருத்துவ சேவை செய்த மருத்துவர் பொன்னையா (90) காலமானார். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய அவர் பின்னர் தனியாக கிளீனிக் தொடங்கி ஏழை மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். ரூ.10, ரூ.20 கட்டணத்தில் மருந்துகளுடன் சிகிச்சை வழங்கிய அவரது சேவை அனைவரையும் கவர்ந்தது. கடந்த வாரம் வரை நோயாளிகளை பார்த்து வந்த அவர் இன்று அதிகாலை திருவனந்தபுரத்தில் உயிரிழந்தார்.
அவரது கிளீனிக்கிற்கு தினமும் ஏராளமான ஏழை, எளிய மக்கள் வந்துசென்றனர். குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்ததால் “50 ரூபாய் டாக்டர்” என்றும் “அன்பு டாக்டர்” என்றும் பகுதி மக்கள் அழைத்து வந்தனர். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் 30 ஆண்டுகளாக பேருந்தில் பயணம் செய்து வந்து சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது. மக்களுடன் நெருக்கமாக பழகிய அவர் அனைவரின் மனதிலும் இடம்பிடித்திருந்தார்.
டாக்டர் மறைவு செய்தி அறிந்த ஆறுமுகநேரி மக்கள் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கினர். அவரது உடல் அவர் சேவை செய்த கிளீனிக்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமானோர் கண்ணீருடன் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவரைப் போன்றே குடும்பத்தில் ஒருவர் கிளீனிக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!