பாப்கார்ன் மூளை ... இந்திய இளைஞர்களை விழுங்கும் புதிய நோய்... அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை!
டிஜிட்டல் திரையில்லாமல் ஒரு தினமும் முடியாத காலம் இது. வீடியோ ரீல்களை ஸ்க்ரோல் செய்வது, செயலிகளுக்குள் இடைவேளையில்லாமல் தாவுவது, தொடர்ந்து ஓடும் அறிவிப்புகள் – இவை அனைத்தும் சேர்ந்து, இன்றைய தலைமுறையில் ‘பாப்கார்ன் மூளை’ எனப்படும் மனநிலை உருவாகி வருவதாக மருத்துவர்கள் கவலை வெளிப்படுத்துகின்றனர். இது மருத்துவ ரீதியாக நோயாக வகைபடுத்தப்படவில்லை என்றாலும், அதிவேக டிஜிட்டல் தகவல்களுக்கு அடிமையாகும் போது, மெதுவான நிஜ வாழ்க்கைப் பணிகளில் மனம் நிலைக்காமல் போவது இதன் முக்கிய விளைவு.
பாப்கார்ன் வெடிப்பது போல திடீரென எண்ணங்கள் வெடித்து மாறிக்கொண்டே இருக்கும் நிலையில், ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துவது இன்னும் கடினமாகிறது. அமைதியான தருணத்தையும் மூளை ஏற்றுக்கொள்ளாமல், எப்போதும் புதிய தூண்டுதல் தேடும் நிலை உருவாகிறது. அதிக திரை நேரம், உடனடி மகிழ்ச்சி தரும் வீடியோ உள்ளடக்கங்கள், தொடர்ச்சியான ஸ்க்ரோல் பழக்கம் ஆகியவை இதை உருவாக்கும் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. இதன் அறிகுறிகள் – கவனம் சிதறுதல், தூக்கமின்மை, பதட்டம், ஆஃப்லைன் செயல்பாடுகளில் விருப்பம் குறைதல் போன்றவை.
இது பலருக்கும் ‘இளைஞர்களின் பிரச்சனை’ எனத் தோன்றினாலும், 30-45 வயது மனிதர்களும் இதன் பாதிப்பில் சிக்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையை கட்டுப்படுத்த, தியானம், யோகா, மூச்சுப்பயிற்சிகள், அறிவிப்புகளைத் தவிர்த்தல், ஒரே நேரத்தில் ஒரு பணியில் கவனம் செலுத்துதல், வீட்டில் திரை இல்லாத பகுதிகளை உருவாக்குதல் போன்ற பழக்கங்களுக்கு மருத்தவர்கள் பரிந்துரை விடுக்கின்றனர். சரியான நேரத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படும் போது, கவனமும் மன தெளிவும் மீண்டும் கைவரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!