undefined

வாடிகன் கிறிஸ்துமஸ் உரையில் போப் ஆண்டவர் காசா மக்கள் குறித்து உருக்கம்!

 

உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் பேராலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் போப் ஆண்டவர் லியோ பங்கேற்று உலக அமைதி குறித்த முக்கிய உரையை ஆற்றினார்.

கடந்த மே 8-ம் தேதி கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராகப் பதவியேற்ற போப் ஆண்டவர் லியோ, இன்று தனது முதல் கிறிஸ்துமஸ் நள்ளிரவுப் பிரார்த்தனையை வழிநடத்தினார். இந்தப் பிரார்த்தனையில் இந்தியா, உக்ரைன், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 10 குழந்தைகள் பூக்களை ஏந்திச் செல்ல, இயேசுவின் பிறப்புக் காட்சியை நோக்கி போப் ஆண்டவர் ஊர்வலமாகச் சென்றார்.

மழை மற்றும் குளிரையும் பொருட்படுத்தாமல் சுமார் 11,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பேராலயத்திற்கு உள்ளேயும் வெளியேயும் திரண்டு இந்தப் புனித நிகழ்வில் பங்கேற்றனர். ஆராதனையைத் தொடர்ந்து ஆற்றிய உரையில் போப் ஆண்டவர் லியோ ஆன்மீக மற்றும் சமூகக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்:

"பூமியில் சக மனிதனுக்கு இடமில்லை என்றால், அங்கு கடவுளுக்கும் இடமில்லை. எங்கு மனிதன் மதிக்கப்படுகிறானோ, அங்குதான் கடவுள் வசிக்கிறார். ஒரு ஆடம்பரமான கோவிலை விட, ஏழைகளுக்கு அடைக்கலம் தரும் ஒரு மாட்டுக்கொட்டகை புனிதமானதாக மாறக்கூடும். தேவைப்படுபவர்களுக்கு உதவ மறுப்பது என்பது நேரிடையாகக் கடவுளையே நிராகரிப்பதற்குச் சமம்" என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய உலகச் சூழல் குறித்துப் பேசிய போப் ஆண்டவர், போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நினைவு கூர்ந்தார்: "மழை, காற்று மற்றும் குளிரால் பல வாரங்களாகத் தவித்து வரும் காசா (Gaza) மக்களைக் குறித்து நாம் சிந்திக்காமல் இருக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள அகதிகள் மற்றும் நமது நகரங்களிலேயே வீடின்றி வாடும் ஆயிரக்கணக்கான மக்களின் நிலை வேதனை அளிக்கிறது. போர் என்பது எதற்கும் தீர்வாகாது. உலகப் பிரச்சினைகள் அனைத்தும் முறையான பேச்சுவார்த்தை மற்றும் அன்பின் மூலமாக மட்டுமே முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்" என அவர் உலக நாடுகளுக்கு அறைகூவல் விடுத்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!