undefined

அபாய கட்டத்தில் போப் பிரான்சிஸ்... மருத்துவர்கள் அறிவிப்பு!

 


ரோம் நகரில் போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா காய்ச்சல் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் நிலை குறித்து முதன்முறையாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். போப் பிரான்சிஸிற்கு தற்போது 88 வயதாகிறது. 

கடந்த பிப்ரவரி 14ம் தேதி போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவு மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக அவர் ரோமில் உள்ள ஜெமேலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்தும், அவரது இறுதி சடங்குகளுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் வதந்திகள் பரவி வந்தன. தொடர்ந்து போல் உடல் நிலைக் குறித்து பல்வேறு விதமான யூகமான தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

போப் பிரான்சிஸிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் அவரது உடல்நிலைக் குறித்து தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் ஜெர்ஜியோ அல்பியரி, லுகி கார்போன் ஆகியோர் கூறுகையில், “அபாய கட்டத்தை போப் பிரான்சிஸ் தாண்டி விட்டாரா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் சிகிச்சையில் உள்ளாரா என்றால் அதற்கும் இல்லை என்று தான் சொல்வோம்.

இப்போது தான் போப் பிரான்சிஸ் அறைக்குச் சென்று 20 நிமிடங்கள் பிரார்த்தனை செய்து விட்டு வந்துள்ளோம். தற்போதைய நிலை என்பது இது தான். அவரும் ஒரு சாதாரண மனிதர் தான்” என்று கூறியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?