undefined

 போப் பிரான்சிஸ் மறைவு... 3 நாள்கள் அரசு முறை துக்கம்! 

 

கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் நேற்று ஏப்ரல் 21ம் தேதி திங்கட்கிழமை காலமானார்.  அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவா்கள், அரசியல் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.


அந்த வகையில் இந்தியா போப் பிரான்சிஸ் மறைவுக்கு  இரங்கல் தெரிவிக்கும் விதமாக, இன்றும் நாளையும் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும். அதனைத்தொடர்ந்து, போப் உடல் நல்லடக்கம் செய்யப்படும் நாளிலும் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.  


மேற்கண்ட 3 நாட்களும் அனைத்து பகுதிகளிலும் அலுவலகங்களிலும் நிறுவனங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, தமிழகத்திலும் இன்றும் நாளையும் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என தலைமைச் செயலகத்திலிருந்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?