undefined

பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்.. திரையுலகினர் இரங்கல்!

 

இன்று மலேசியாவின் பிரபல நடிகை நாடியா கெசுமா சவூதி அரேபியாவில் மாரடைப்பால் காலமானார் என்ற உறுதிப்படுத்தப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது.

மலேசியத் திரையுலகில் 'Syaitan Munafik' மற்றும் 'Kudeta' போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்ற 49 வயது நடிகை நாடியா கெசுமா, உம்ரா யாத்திரைக்காகச் சவூதி அரேபியா சென்றிருந்தார்.

கடந்த புதன்கிழமை ஜித்தா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய பிறகு அவர் மாயமானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

இன்று காலை அவரது மகள் சமூக வலைதளம் வாயிலாகத் தனது தாய் மாரடைப்பால் காலமானதை உறுதிப்படுத்தியுள்ளார். விமான நிலையத்திற்கு வந்த அதே நாளில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்தத் தகவல் குடும்பத்தினருக்குத் தாமதமாகவே கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவரது மறைவுக்கு மலேசிய மற்றும் தெற்காசியத் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!