undefined

 பிரபல பாடகி தற்கொலை முயற்சி .... வெண்டிலேட்டரில்  ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை!  

 


 
பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர். இவர்  மார்ச் 2 ம் தேதி ஹைதராபாத்தில்  நிஜாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதன்படி  அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை கல்பனா  உட்கொண்டதாக நம்பப்படுகிறது. இதனையடுத்து அவர் தனது வீட்டில் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு  தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கல்பனா வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கல்பனா இரண்டு நாட்களாக கதவைத் திறக்காததால், அக்கம் பக்கத்தினர்  போலீசுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் அவர் மீட்கப்பட்டுள்ளார்.  
விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து பார்க்கையில் கல்பனா மயக்க நிலையில் இருந்ததை கண்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அளவிற்கு அதிகமாக தூக்கமாத்திரை உட்கொண்டுள்ளதையும் அறிந்துள்ளனர். அவர் தற்கொலைக்கு முயன்றாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர்.  அவரது தற்கொலை முயற்சிக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.

கல்பனா தென்னிந்திய மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர்  இவர் பிரபல நடிகர் டி.எஸ். ராகவேந்திராவின் மகள் ஆவார். அவர் ஸ்டார் சிங்கர் மலையாளத்தில் பங்கேற்று 2010 ல் அந்தப் பட்டத்தை வென்றார். அவரது வெற்றியைத் தொடர்ந்து, இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் உட்பட   பல குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிந்தவர்.  இசைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், ஐந்து வயதிலிருந்து தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். பல மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். கமல்ஹாசன் நடித்த 'புன்னகை மன்னன்' படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார் கல்பனா. அவர் பாடல் சார்ந்த ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக இருந்துள்ளார்.ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தெலுங்கு சீசன் 1ல் கல்பனா பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?