34 வயசு தான்... விமான விபத்தில் பிரபல பாடகர் பலி... சோகத்தில் இசை உலகம்!
பாடகர், பாடலாசிரியர் மற்றும் லத்தீன் இசை உலகின் பிரபல நட்சத்திரமாக விளங்கிய யீசன் ஜிமெனெஸ் விமான விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 34. கொலம்பியாவில் பைபா – டியூடாமா இடையிலான பகுதியில் நடந்த இந்த விபத்தில், மெடலின் நோக்கிச் சென்ற சிறிய விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தில் இருந்த ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தை அடுத்து, யீசன் ஜிமெனெஸ் மற்றும் அவரது குழுவினர் உயிரிழந்ததை அவரது பிரதிநிதி இன்ஸ்டாகிராம் மூலம் உறுதி செய்தார். “ஒரு கலைஞரை மட்டுமல்ல, கனவுகளால் வாழ்ந்த ஒரு மனிதனை இழந்துள்ளோம்” என அவரது குழு வெளியிட்ட அறிக்கை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்தில் ஜெபர்சன் ஒசோரியோ, ஜுவான் மானுவல், ஆஸ்கார் மரின், வெய்ஸ்மேன் மோரா மற்றும் விமான கேப்டன் பெர்னாண்டோ டோரஸ் ஆகியோரும் உயிரிழந்தனர்.
கொலம்பியாவின் முன்னணி இசை கலைஞர்களில் ஒருவரான யீசன் ஜிமெனெஸ், பாரம்பரிய ரான்செரா இசையை நவீன பாணியில் பாடி தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். 2024ஆம் ஆண்டு போகோட்டாவில் தொடர்ந்து அரங்குகளை நிரப்பிய அவர், 2025ல் எல் காம்பின் ஸ்டேடியத்தில் பாட திட்டமிட்டிருந்தார். அவரது திடீர் மறைவு இசை உலகை உலுக்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!