விளையாட்டால் விபரீதம்… நண்பனின் கையில் பெட்ரோல் ஊற்றி தீ... பகீர் வீடியோ!
Jan 6, 2026, 19:30 IST
விளையாட்டிற்காக நண்பனின் கையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு இளைஞன் தனது நண்பனின் கையில் பெட்ரோலை ஊற்றி, வேடிக்கையாக தீக்குச்சியால் பற்ற வைக்கிறான். சில நொடிகளில் தீ கையில் மளமளவென பரவி எரியத் தொடங்குகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பொழுதுபோக்கிற்காக இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்கொலைக்கு சமம் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். வைரலாவதற்காக உயிரைப் பணயம் வைக்கும் மனப்போக்கு இளைஞர்களிடையே அதிகரிப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!