undefined

பௌர்ணமி கிரிவலம்... இன்று திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

 

இன்று மார்கழி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பெளர்ணமி பூஜை நடைபெறுகிறது. இதற்காக மலையைச் சுற்றிலும் கிரிவலம் செல்வதற்காக கூடும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்பட உள்ளது.

இன்று விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம் ➡️ திருவண்ணாமலை:இடையே காலை 10:10 மணிக்கு புறப்படும் மெமு ரயில், காலை 11:45 மணிக்குத் திருவண்ணாமலையை சென்றடையும்.

அதே போன்று திருவண்ணாமலை ➡️ விழுப்புரம் ரயில், திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து பகல் 12:40 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2:15 மணிக்கு விழுப்புரத்தை சென்றடையும்.

இது 8 பெட்டிகளைக் கொண்ட 'மெமு' (MEMU) வகை ரயில் ஆகும். இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பதிவு தேவையில்லை; சாதாரண பயணச் சீட்டு பெற்றுப் பயணிக்கலாம். இந்தச் சிறப்பு ரயில் வெங்கடேசபுரம், மாம்பலப்பாடு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அந்தம்பலம் மற்றும் தண்டறை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலமானது இன்று மாலை தொடங்கி நாளை காலை வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வேலூர், சென்னை மற்றும் புதுச்சேரியிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!