இந்தியாவின் தங்க மகன்... பாரா பாட்மிட்டனில் 6வது முறையாக உலக சாம்பியன்ஷிப் வென்ற பிரமோத் பகத்!
பஹ்ரைனில் நடைபெற்ற பிடபிள்யூஎஃப் பாரா உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பிரமோத் பகத் மீண்டும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். எஸ்எல்3 இறுதிப் போட்டியில் இந்தோனேசிய வீரர் முகமது அலி இம்ரானை 21-12, 21-18 என்ற கேம்களில் வீழ்த்தினார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் 6வது முறையாக தங்கம் வென்று தனது ஆதிக்கத்தை தொடர்ந்துள்ளார்.
ஒற்றையர் பிரிவில் 6 தங்கமும், இரட்டையர் பிரிவில் 2 தங்கமும் சேர்த்து மொத்தம் 8 தங்கப் பதக்கங்கள் வென்று வரலாறு படைத்துள்ளார். முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நான்கு முறை உலக பட்டம் வென்றது அவரது திறமையை மேலும் உயர்த்தியுள்ளது.
ஊக்கமருந்து பரிசோதனை தொடர்பான பிரச்சினையால் 18 மாதங்கள் தடைக்கு உள்ளான அவர், பாரீஸ் பாராலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போனார். இருப்பினும் தடைக்குப் பிறகு மீண்டு வந்து மீண்டும் தங்கம் வென்றுள்ளார். கடினமான கட்டத்தை தாண்டி வெற்றியை மீட்டெடுத்த அவரது சாதனை இந்திய விளையாட்டு உலகுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!