கட்சிக்கு நன்கொடை வழங்காத யாரையும் நான் சந்திக்க மாட்டேன்... பிரசாந்த் கிஷோர்!
பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி எந்த ஒரு இடத்தையும் வெல்லாத நிலையில், கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் தன் சொத்துகளின் 90 சதவீதத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு கட்சிப் பிரச்சார நிதிக்காக வழங்குவதாக அறிவித்துள்ளார். டெல்லி வீட்டைத் தவிர்ந்த அனைத்து சொத்துகளையும் கட்சிக்கு வழங்கப்போவதாக காந்தி ஆசிரமத்தில் நடைபெற்ற மௌன விரதத்திற்குப் பிறகு அவர் உறுதியளித்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் நிதி தட்டுப்பாட்டை சரிசெய்யும் நோக்கில், ஆண்டுதோறும் ரூ.1,000 நன்கொடை வழங்குமாறு பீகார் மக்களிடம் கிஷோர் தனிப்பட்ட அழைப்பு விடுத்துள்ளார். “இந்த தொகையை வழங்காதவர்களை நான் சந்திக்க மாட்டேன்” என்று அவர் தெரிவித்தது கட்சியின் நிதி சுயநிறைவை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. 238 தொகுதிகளில் போட்டியிட்ட ஜன் சுராஜ் ஒரு இடத்தையும் வெல்லாதது, பெரும்பாலான வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தது கட்சிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தோல்விக்கு முழுப் பொறுப்பையும் ஏற்ற கிஷோர், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் தான் தோல்வியடைந்ததாக ஏற்றுக்கொண்டார். ஜனவரி 15 முதல் தொடங்கும் ‘பீகார் நவநிர்மாண சங்கல்ப் யாத்ரா’க்கு முன் கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், “எதிர்வரும் 15–18 மாதங்களில் பீகாரின் ஒவ்வொரு வீட்டையும் எட்டிச் சென்று, அரசின் தவறுகளை வெளிப்படுத்துவோம்” என்று அவர் கூறியுள்ளார். தன் அறிவிப்பால் பீகார் அரசியலில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ள நிலையில், “பொறுமையுடன் தொடர்ந்து போராடுவோம்” என்று கிஷோர் உறுதியளித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!