undefined

 பாஜக, திமுக அணிகளுடன் தவெகவும் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது... பிரவீன் சக்கரவர்த்தி ! 

 
 

 

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும் அரசியல் விமர்சகருமான பிரவீண் சக்கரவர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொடர்ந்து ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில், விஜய்க்கு மக்களிடையே பெரும் ஆதரவு இருப்பதாகவும், தவெகவின் வளர்ச்சி ஊரறிந்த விஷயம் எனவும் தெரிவித்துள்ளார். தனது ஆய்வுகள் மற்றும் தரைமட்ட கருத்துக் கணிப்புகளில் இதை உறுதிப்படுத்தியதாக அவர் கூறினார்.

தமிழகத்தில் தற்போது மூன்று பெரிய அரசியல் அணிகள் உள்ளன என்றும், பாஜக, திமுக அணிகளுடன் தவெகவும் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டாலும் தவெக வலுவாக செயல்படும் என்றும், விஜய்யின் தனிப்பட்ட செல்வாக்கு மாநிலம் முழுவதும் பரவலாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், எதிர்கால சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கியை தவெக கவரும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தவெக தனித்து போட்டியிட்டாலும் குறைந்தது 18 சதவீத வாக்குகளை பெறும் அடிப்படை ஆதரவு கட்சிக்கு உள்ளது எனவும் அவர் மதிப்பிட்டுள்ளார். இந்த கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!