கர்ப்பிணி பெண் கமேண்டோ அடித்துக் கொலை... கணவர் பரபரப்பு வாக்குமூலம்!
தில்லி மோகன் கார்டன் பகுதியில் வசித்து வந்த காஜல் சௌத்ரி (27), ஸ்வாட் கமாண்டோ பிரிவில் பணியாற்றியவர். அவரது கணவர் அங்கூர், பாதுகாப்பு அமைச்சகத்தில் கிளர்க் பணியில் இருந்தார். திருமணத்திலிருந்து இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜனவரி 22 அன்று, வரதட்சிணை தொடர்பாக ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் போது, அங்கூர் கோபத்தில் காஜலின் மீது தாக்குதல் நடத்தினார். அங்கூர் காஜலின் தலையில் பலமுறை தாக்கியதோடு, அவரது சகோதரருக்கு “உன் அக்காவை கொல்லப் போகிறேன்” என மிரட்டியுள்ளார். காஜல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 5 நாட்கள் போராடிய பின்னர், ஜனவரி 27 அன்று உயிரிழந்தார்.
இக்கேசில் அங்கூர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.இது குறிப்பு, அவர்களுக்கு ஒன்றரை வயது ஒரு ஆண் குழந்தை உள்ளது, தற்போது குழந்தை காஜலின் பெற்றோரிடம் உள்ளது. காஜலின் பெற்றோர் வழக்குக்கு நீதி கோருகின்றனர் மற்றும் சம்பவம் குடும்பம் மற்றும் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!