மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணிப் பெண் பலியான சோகம்!
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பூச்சூர் கிராமத்தில், வீட்டு மாடிப்படியில் இருந்து எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்த 3 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏரியூர் அருகே உள்ள பூச்சூரைச் சேர்ந்த விவசாயி கண்ணன் (32) என்பவரது மனைவி ரம்யா (27). இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு மகள்கள் உள்ளனர். ரம்யா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி ரம்யா தனது வீட்டு மேல் மாடிக்கு ஏறியபோது, எதிர்பாராதவிதமாகப் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், அவரை உடனடியாக மீட்டுச் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து ஏரியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!