தேமுதிக யார் பக்கம்… பிரேமலதாவின் ஸ்கெட்ச் இதுதான்... !
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி உருவாகும் சூழல் உள்ளது. பிரதான போட்டி திமுக–அதிமுக இடையே என்றாலும், விஜய்யின் தவெக வாக்குகள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது. இதனால் கூட்டணி அமைப்பதில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த சூழலில் பாமக, தேமுதிக கூட்டணியில் முக்கிய இடம் பெறுகின்றன. பாமகவில் உட்கட்சி பிரச்னை நீடிப்பதால், தேமுதிக மீது திமுக–அதிமுக கவனம் திரும்பியுள்ளது. இரு தரப்பும் ராஜ்யசபா சீட் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகள் வழங்கும் கட்சியுடனே கூட்டணி என்ற நிபந்தனையை பிரேமலதா முன்வைத்துள்ளார்.
இந்த நிபந்தனை அதிமுகவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி பெரியதாக இருப்பதால், தேமுதிகுக்கு அதிக இடம் கொடுக்க வாய்ப்பு குறைவு. மறுபுறம் தவெக இன்னும் கூட்டணியை அறிவிக்காத நிலையில், விஜயகாந்தின் செல்வாக்கை பயன்படுத்த விஜய்யும் நகர்வுகளை மேற்கொள்கிறார். தேமுதிக எந்த பக்கம் சாயும் என்ற முடிவு ஜனவரியில் வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!