யாருமே கூப்பிடல... பாஜகவுடன் கூட்டணி குறித்து பிரேமலதா ஓபன் டாக்!
தேமுதிக கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். யாருடன் கூட்டணி அமைப்பது என்பது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என அவர் தெளிவுபடுத்தினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை என்றும் கூறினார்.
பியூஷ் கோயல் சென்னை வந்தது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என அவர் தெரிவித்தார். அதிமுக–பாஜக கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றார். தேமுதிக தனித்து போட்டியிடுமா அல்லது வேறு கூட்டணியில் சேருமா என்பது குறித்து தற்போது முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
மதுரை எல்ஐசி மேலாளர் தீபக் தற்கொலை வழக்கு குறித்து பேசிய அவர், அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது என்றார். மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேமுதிக எடுக்கும் அடுத்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!