தேமுதிக கூட்டணி முடிவு… தொண்டர்களின் விருப்பம் தான் முக்கியம்... பிரேமலதா பளிச்!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து, கட்சியின் கூட்டணி நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தினார். “எங்களுக்குரிய மரியாதை கிடைக்கும் இடத்தில் கூட்டணி அமைப்போம். ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் இறுதி நிலை எட்டாத நிலையில், நாங்கள் ஏன் உடனடியாக அறிவிக்க வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார். கூட்டணி முடிவை அவசரப்படுத்தாமல், கட்சி விருப்பப்படி எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரேமலதா, தேமுதிக பொதுக்கூட்டங்கள் தனித்துவம் வாய்ந்தவை என பெருமிதம் தெரிவித்தார். “எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்கள் சொந்த செலவில் வருகிறீர்கள். நன்றி. நாளை முக்கிய நாள்” என்று தொண்டர்களுக்கு நன்றி கூறிய அவர், கட்சியின் அடிமட்ட ஆதரவு வலிமையையும் வெளிப்படுத்தினார்.
“தொண்டர்களின் விருப்பமே கூட்டணிக்கான அடிப்படை. தேமுதிக தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் தான் கூட்டணி. 2026 தேர்தல் முடிவுகள் தேமுதிகவிற்கு சாதகமாக இருக்கும். யாருடனும் கூட்டணி பேசவில்லை” என அவர் உறுதியாக கூறினார். இதன் மூலம், 2026 தேர்தலில் தேமுதிக சுதந்திரமான நிலைப்பாட்டையும், தொண்டர்கள் மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!