கார்வார் கடற்படை தளத்தில் ஜனாதிபதி முர்மு... இன்று நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்கிறார்!
ஜனாதிபதி திரௌபதி முர்மு 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக 3 மாநிலங்களுக்குச் செல்கிறார். இந்தப் பயணத்தின் மிக முக்கிய நிகழ்வாக இன்று டிசம்பர் 28ம் தேதி அவர் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து இந்தியக் கடற்படையின் வலிமையைக் கள ஆய்வு செய்ய உள்ளார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு கோவா, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று மாலை அவர் டெல்லியில் இருந்து கோவா புறப்பட்டுச் சென்றார்.
இன்று கர்நாடக மாநிலம் கார்வார் கடற்படைத் தளத்திற்கு ஜனாதிபதி வருகை தருகிறார். அங்கிருந்து இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் ஏறி அவர் கடலுக்கு அடியில் பயணம் செய்கிறார்.
இந்த பயணத்தின் போது நீர்மூழ்கிக் கப்பலின் செயல்பாடு, தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கடலுக்கு அடியில் கடற்படை வீரர்களின் சவாலான பணிச்சூழல் குறித்து அவர் நேரில் கேட்டறிய உள்ளார். முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருக்கும் ஜனாதிபதி ஒருவர் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்வது, இந்தியக் கடற்படை வீரர்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும் ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
கர்நாடக பயணத்தை முடித்துக் கொண்டு நாளை ஜார்க்கண்ட் மாநிலத்திற்குச் செல்கிறார். அங்கு ஜாம்ஷெட்பூரில் உள்ள புகழ்பெற்ற தேசிய தொழில்நுட்பக் கல்வி மையத்தின் பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார்.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கார்வார் கடற்படைத் தளம் மற்றும் ஜாம்ஷெட்பூர் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நீர்மூழ்கிக் கப்பல் பயணத்திற்காக இந்தியக் கடற்படை உயர்மட்டப் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!