3 நாட்கள், 3 நாடுகள்... டிசம்பர் 15ம் தேதி பிரதமர் மோடி சுற்றுப்பயணம்!
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் மூன்று முக்கிய நாடுகளுக்கு பதவிமரியாதை சுற்றுப்பயணத்துக்கு புறப்படுகிறார். முதலில் ஜோர்டான் மன்னர் அப்துல்லா II அவர்களின் அழைப்பை ஏற்று டிசம்பர் 15-ந்தேதி அந்நாடு செல்கிறார். இருநாட்டு உறவுகள் மற்றும் பிராந்திய நிலவரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.
அதன்பின் டிசம்பர் 16-ந்தேதி பிரதமர் மோடி எத்தியோப்பியா பயணம் செய்கிறார். ஆப்பிரிக்கத் தேசமான எத்தியோப்பியாவிற்கு மோடி செல்லுவது இதுவே முதல் முறை. அந்நாட்டு பிரதமர் அபிய் அகமது அலியுடன் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் கூட்டு ஒத்துழைப்புகள் பற்றி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
சுற்றுப்பயணத்தின் இறுதிப்பகுதியாக மோடி டிசம்பர் 17-ந்தேதி ஓமன் செல்கிறார். இது அவரது இரண்டாவது ஓமன் பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம், விவசாயம், கலாசாரம் என பல துறைகளில் இந்தியா–ஓமன் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!