undefined

நாளை  3000 இளைஞர்களுடன் பிரதமர் மோடி நேரடி உரையாடல்! 

 
 

டெல்லியில் நாளை நடைபெறும் ‘விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2026’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் அவர் நேரடியாக உரையாடுகிறார். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

ஜனவரி 9-ம் தேதி தொடங்கிய இந்த கலந்துரையாடல், நாளை இறுதி அமர்வை எட்டுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள், நாட்டின் வளர்ச்சி, எதிர்கால இலக்குகள், முக்கிய துறைகள் குறித்து தங்கள் கருத்துகளை பிரதமரிடம் பகிர உள்ளனர். மொத்தம் 10 கருப்பொருட்களில் அவர்களது யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் எழுதிய சிறந்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பையும் பிரதமர் வெளியிடுகிறார். இளைஞர்களையும் தேசிய தலைமையையும் இணைக்கும் தளமாக இந்த கலந்துரையாடல் அமைந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் இளம் தலைமுறையின் பங்களிப்பை வலுப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!