undefined

அம்பேத்கர் நினைவு தினம்: நீதி, சமத்துவமே தேசியப் பயணத்தை வழிநடத்துகின்றன - பிரதமர் மோடி புகழாரம்!

 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி, சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 70-வது நினைவு தினம் இன்று (டிசம்பர் 6) அனுசரிக்கப்படுவதையொட்டி, அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாகப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் (சமூக வலைத்தள) பதிவில், "மகா பரிநிர்வாண் தினமான இன்று, டாக்டர் அம்பேத்கரை நினைவு கூர்வோம். அவரின் தொலைநோக்குத் தலைமைத்துவமும், நீதி, சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு ரீதியான உறுதிப்பாடும் நமது தேசியப் பயணத்தைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன. நாட்டை மேம்படுத்துவதற்கு அம்பேத்கரின் கொள்கைப் பாதைகள் மேலும் ஒளிரச் செய்யும்" என்று குறிப்பிட்டுள்ளார். அம்பேத்கரின் நினைவு தினத்தை ஒட்டிப் பல்வேறு அரசியல் தலைவர்களும் அவருக்குப் புகழாரம் செலுத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!