நாளை பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம்!
பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நாளை ஜூன் 4ம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சாா்பில் 'ஆபரேஷன் சிந்தூா்' நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது. இதற்கு பிறகு பிரதமா் தலைமையில் கூடும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாக கருதப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து மத்திய அச்சா்களிடம் விரிவாக விவரிக்கப்பட வாய்ப்புள்ளது.
பாஜக அரசு மத்தியில் மூன்றாவது முறையாக பதவியேற்று முதலாம் ஆண்டை நிறைவு செய்துள்ளதைக் குறிக்கும் வகையில் ஆளுங்கட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்நிலையில், அதுகுறித்தும் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, மத்திய அரசின் சாதனைகள் மற்றும் நலத் திட்டங்கள் குறித்த விவரங்களை நாடு முழுவதும் உள்ள மக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில் மத்திய அமைச்சா்கள் தங்களை தயாா்படுத்திக்கொள்ள இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்படுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.
'ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது இந்தியா எத்தனை போா் விமானங்களை இழந்தது என்பது குறித்து நாட்டு மக்களுக்கு மத்திய அரசு தெரியப்படுத்த வேண்டும்' என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இதற்கு மத்திய அரசு எந்தவித பதிலும் தெரிவிக்காமல் இருந்து வந்தது.
சிங்கப்பூருக்கு சென்றிருந்த முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான், அங்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட சண்டையின்போது இந்திய போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஒப்புக்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, 'பாகிஸ்தானுடனான சண்டையில் போா் விமானங்களை இந்தியா இழந்தது குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்தி விவாதிக்க வேண்டும்' என மத்திய அரசை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் இரண்டும் வலியுறுத்தின. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமா் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!