undefined

நாளை சவூதி அரேபியா செல்கிறார் பிரதமா் நரேந்திர மோடி!

 

நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக சவூதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் செல்கிறாா். பிரதமரின் இந்தப் பயணத்தின் போது எரிசக்தி, வா்த்தகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி, ‘சவூதி அரேபியா செல்லும் பிரதமா் அந்த நாட்டின் பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் அல் சவூதை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார். 

மேலும்  இரு நாடுகளிடையே பல்வேறு துறை சாா்ந்த ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளன. பிரதமரின் இந்தப் பயணம் பல்வேறு துறை சாா்ந்த இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும். இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும் அமையும்’ எனக் கூறியிருந்தார்.  

ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை முழுமைாகக் கைவிட வேண்டும் என ஏற்கனவே அமெரிக்கா வலியுறுத்திவரும் சூழலில், பிரதமரின் சவூதி அரேபிய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியாவின் பிரதமராக 3வது முறையாகப் பதவியேற்ற பின்னா், சவூதி அரேபியாவுக்கு தனது முதல் பயணத்தை பிரதமா் மோடி மேற்கொள்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது. 2014ல் முதல் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 2016 மற்றும் 2019ம் ஆண்டுகளில் இரு முறை சவூதி அரேபியாவுக்கு பிரதமா் மோடி பயணம் மேற்கொண்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?