சென்னையில் தனியார் பேருந்துகள்?!  நாளை பேருந்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!! 

 

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு பேருந்துகள் மட்டுமல்ல தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தலைநகர் சென்னையில் அரசு பேருந்துகள் மட்டுமே அலங்கரித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதனை களைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனை மேலும் சீராக்க ஆலோசனைக்கூட்டங்களும், ஆய்வுகளும் பரிசீலிக்கப்பட்டன. அந்த வகையில் சென்னையில் அரசு பேருந்துகளுடன் தனியார் பேருந்துகளுக்கும் அனுமதி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட்டுள்ளது.முதல் கட்டமாக  கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் நடப்பாண்டில் 500 தனியார் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகரப் போக்குவரத்து கழகத்தின் முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்நிலையில் சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து  அரசுப்பேருந்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.நாளை  மாநகர போக்குவரத்து கழகத்தை கண்டித்து பணிமனைகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என சி.ஐ.டி.யு . அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்