undefined

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு தடை இல்லை... உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வரும் 22ம் தேதி நடைபெற உள்ள தேர்தலை நிறுத்த வேண்டும் என்று கோரி 4 தயாரிப்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தேர்தலை தள்ளிவைக்க தேவையில்லை என தெரிவித்தது. இதனால் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெற வழி வகுக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் இம்முறையும் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை மாற்ற வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் அந்த கோரிக்கையையும் நீதிமன்றம் ஏற்க மறுத்தது. தேர்தல் நடைமுறையில் குறுக்கீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.

இதன் மூலம் தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவி வந்த தேர்தல் சர்ச்சைக்கு தற்காலிக முடிவு கிடைத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தேதியில் தேர்தல் நடைபெறும் என்பதால் தயாரிப்பாளர்கள் மத்தியில் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட உள்ளதால் சங்க உறுப்பினர்கள் கவனம் தேர்தலுக்கு திரும்பியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!