undefined

 வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிச்சுமை… எஸ்ஐஆர்  பணியில் இருந்த மேலும் ஒரு பேராசிரியர் உயிரிழப்பு ! 

 
 

உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் உள்ள அறிவியல் மற்றும் வணிக கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய லால் மோகன் சிங், வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணியில் பூத் நிலை அதிகாரியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மோடிநகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். மூளையில் ரத்தக்கசிவு காரணமாக அவர் இறந்ததாக முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வர் சதீஷ் சந்த் அகர்வால் கூறுகையில், லால் மோகன் சிங் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிரமப்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்காக வீடு வீடாக சென்று பணி மேற்கொண்டதால், அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணியை முடிக்க வேண்டும் என நிர்வாகம் தொடர்ந்து எச்சரித்ததால், மிகுந்த அழுத்தத்துடனேயே அவர் பணிபுரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளின் சுமை கல்வியாளர்களின் உயிரையே பாதிக்கும் நிலை ஏற்படுவதாக இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை கேள்வியை எழுப்பியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!