undefined

8 கோடி பேருக்கு லாபம்... இனி PF பணம் 'இன்ஸ்டன்ட்' ஆக கிடைக்கும்... யுபிஐ வசதி அறிமுகம்!

 

தொழிலாளர் நல அமைச்சகம் பிஎஃப் பணப் பரிமாற்ற முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் இந்த அதிரடி மாற்றத்தைக் கொண்டு வருகிறது.

தற்போது பிஎஃப் பணத்தைப் பெற ஆன்லைனில் விண்ணப்பித்து, அதிகாரிகள் ஒப்புதல் அளித்து வங்கிக்கு வரப் பல நாட்கள் ஆகிறது. இனி, தகுதியான தொகையை உறுப்பினர்கள் தங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட UPI ID மூலம் நேரடியாக மாற்றிக் கொள்ளலாம்.

ஆண்டுதோறும் சுமார் 5 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகளை பிஎஃப் அலுவலகம் கையாள்கிறது. இந்தத் தானியங்கி முறை மூலம் பிஎஃப் அலுவலகத்தின் வேலைப்பளு குறைவதோடு, மக்களுக்கும் விரைவான சேவை கிடைக்கும். வங்கிப் பரிமாற்றங்களைப் போலவே, இதிலும் UPI PIN பயன்படுத்தப்படும் என்பதால் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

இதற்காக வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (EPFO) தனது மென்பொருள் கட்டமைப்பை (Software Infrastructure) வங்கிகளுக்கு இணையாக மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், இந்தியாவில் உள்ள சுமார் 8 கோடி இபிஎஃப் (EPF) உறுப்பினர்கள் எவ்வித அலைச்சலும் இன்றி தங்கள் அவசரத் தேவைகளுக்குப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!