உரிய விலை கிடைக்கல... மக்காச்சோள மூட்டைக்கு மாலை அணிவித்து விவசாயிகள் நூதன போராட்டம்!
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்காச்சோளத்திற்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் பூ. விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் மக்காச்சோள மூட்டைக்கு மாலை அணிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு உடனடியாக தலையிட்டு உரிய விலை உறுதி செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
மக்காச்சோளத்திற்கு குறைந்தது ரூ.2400 வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். கடந்த ஆண்டு ரூ.2325 கிடைத்த நிலையில், இந்த ஆண்டு ரூ.2425 வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது தனியார் வியாபாரிகள் ரூ.1700 முதல் ரூ.1900 வரை மட்டுமே கொள்முதல் செய்வதாக குற்றம்சாட்டினர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு விவசாயிகளின் பிரச்சினையை கவனிக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர். மற்ற மாநிலங்களில் அரசு நேரடியாக தொழிற்சாலை அமைத்து கொள்முதல் செய்கின்றது எனவும் குறிப்பிட்டனர். மக்காச்சோள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பயிர் காப்பீடு திட்டம் முழுமையாக கிடைக்க அரசு முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!