undefined

இந்தியாவிற்குப் பெருமை... 100 கி.மீ. அல்ட்ரா ஓட்டத்தில் அமர் சிங் தேவந்தா சாம்பியன்!

 

சர்வதேச அல்ட்ரா ஓட்ட வீரர்கள் சங்கத்தால் (IAU) ஆண்டுதோறும் நடத்தப்படும் மதிப்புமிக்க ஆசியா ஓசேனியா 100 கி.மீ. அல்ட்ரா ஓட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமர் சிங் தேவந்தா அபாரமான ஓட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இந்த மாபெரும் வெற்றி, இந்திய அல்ட்ரா ஓட்டப் பந்தய வரலாற்றில் ஒரு புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளது.

தாய்லாந்தின் பாங்காக் நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில், உலகெங்கிலும் இருந்து கடுமையான போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இந்தச் சவாலான போட்டியில், அமர் சிங் தேவந்தா ஆரம்பம் முதல் இறுதி வரை நிலைத்து நின்று ஓடினார்.

போட்டியின் மொத்த தூரமான 100 கிலோமீட்டரை, அவர் வெறும் 6 மணி நேரம் 59 நிமிடங்கள் 37 வினாடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்தார். அல்ட்ரா மாரத்தான் பிரிவில், ஒரு இந்திய வீரர் 7 மணி நேரத்திற்குள் 100 கி.மீ. தூரத்தைக் கடப்பது இதுவே முதல் முறை என்பதால், இச்சாதனை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அமர் சிங் தேவந்தாவின் இந்த வெற்றி, இந்தியாவில் வளர்ந்து வரும் அல்ட்ரா ஓட்டப் பந்தயத்தின் திறனை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இந்தச் சாம்பியன்ஷிப் போட்டியில், அமர் சிங்குடன் இணைந்து இந்தியாவின் சார்பில்  சவுரவ் குமார் ரஞ்சன், கீனோ ஆன்டனி, வேலு பெருமாள், யோகேஷ் சனப் மற்றும் ஜெயத்ரத் ஆகியோர் பங்கேற்றனர்.  சவாலான தட்பவெப்ப நிலை மற்றும் நீண்ட தூரம் கொண்ட இந்தப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினரின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. உலக அளவில் இந்தியாவின் தடகளத் திறனை நிரூபிக்க அமர் சிங் தேவந்தாவின் வெற்றி ஒரு உந்துசக்தியாக அமைந்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!