தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 22, 23 தேதிகளில் போலீஸ் பறிமுதல் வாகனங்கள் பொது ஏலம்... பொதுமக்கள் வாங்க வழிகாட்டி நெறிமுறைகள்!
போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை தமிழக காவல்துறை வரும் டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் பொது ஏலத்தில் விடுகிறது. கூடுதல் காவல் இயக்குநரின் உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் NIB பிரிவு அலுவலகங்களில் இருக்கும் 72 வாகனங்கள் – 30 இருசக்கரங்கள், 2 மூன்றுசக்கரங்கள், 30 நான்கு சக்கரங்கள், 4 லாரிகள், 6 படகுகள் – மதுரை மற்றும் திருச்சியில் ஏலத்துக்கு வர உள்ளன. இதில் 48 வாகனங்கள் மதுரையில் (22ம் தேதி), 24 வாகனங்கள் திருச்சியில் (23ம் தேதி) ஏலம் விடப்படும்.
ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், டிச.7 முதல் 21 வரை மாநிலம் முழுவதும் உள்ள NIB அலுவலகங்களில் நேரில் சென்று வாகனங்களைப் பார்வையிடலாம். திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கோயம்பத்தூர், சேலம், விழுப்புரம், சிவகங்கை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தொடர்பு எண்களும் பிரிவு அலுவலகங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நுழைவுக்கட்டணமாக ரூ.1,000 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். ஏலம் பெற்றவர்கள் உடனடியாக ஏலத்தொகையை ரொக்கமாக செலுத்த வேண்டும். மேலும், இரண்டு நாட்களுக்குள் GST தொகையை தங்களின் GST கணக்கில் செலுத்தி, ரசீதை NIB அலுவலகத்தில் சமர்ப்பித்த பின்பு, விற்பனை ஆணை வழங்கப்படும். ஏலத்தில் பங்கேற்போரிடம் ஆதார் அட்டை நகல் கட்டாயமாக கோரப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!