undefined

பீதியில் பொதுமக்கள்...  தெரு நாய் கடித்து ஒருவர் பலி!  
 

 

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம், சேவூர் ஊராட்சி, தேவேந்திர் நகர் பகுதியில் வசித்து வருபவர்  லட்சுமணன். இவரது மகன் அற்புதராஜ் . 42 வயதான இவரை கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன் தெரு நாய் கடித்ததாக தெரிகிறது.   அதன்பிறகும் அவர், உடல்நலனில் எந்தவித பாதிப்புமின்றி வழக்கம்போல பணிகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் திடீரென அற்புதராஜுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் அற்புதராஜை, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது சிகிச்சை அளித்த மருத்துவர், நாய் கடித்து, சிகிச்சை பெறாததால் அற்புதராஜ் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.  உடனடியாக அற்புதராஜ் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 நாள்கள் தொடர் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று ஏப்ரல் 17ம் தேதி வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.

மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அற்புதராஜ் உறவினர்களுக்கு  கோவை மருத்துவமனையில் உரிய தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அற்புதராஜ் தெருநாய் கடித்து  உயிரிழந்த சம்பவம் அப்பகுதி  மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  உடனடியாக தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாய் கடித்து சிகிச்சை பெறாமல் உள்ளவர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?